Trending News

அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பதவியுயர்வு பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமது தொழிற்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தமது அறிவு மற்றும் ஆற்றல் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இந்த கலந்துரையாடலில் அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Stay Order preventing the arrest of Gotabaya Rajapaksa extended

Mohamed Dilsad

ராஜித சேனாரத்னவுக்கு GMOA கடும் எதிர்ப்பு

Mohamed Dilsad

Ven. Gnanasara Thero withdraws the FR Petition

Mohamed Dilsad

Leave a Comment