Trending News

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகும்…

(UTV|COLOMBO)-ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (23) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும் ஜனாதிபதி விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இல்லாத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியுள்ளதாகவும், எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை வௌியிட உள்ளதாகவும், ஜனவரி மாதம் அதனை வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதி பொது ஆபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வந்து தான் மேற்கொண்டது அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று நாட்டுக்கு வேண்டாத அனைத்து சக்திகளையும் நீக்கி முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டமும் அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்று தன்னை பிழையாக காணும் அனைவரும் நாளை தன்னை சரியான ஒரு தலைவர் என புரிந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் தன்னை கொலை செய்யும் சதி முயற்சி சம்பந்தமான பல தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வௌியாகும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

O/L results to be issued on Thursday

Mohamed Dilsad

plantation estate houses in Talawakelle gutted in fire

Mohamed Dilsad

Anjalika takes on Tania in Under 18 final

Mohamed Dilsad

Leave a Comment