Trending News

தொடரூந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV|COLOMBO)-எரிபொருள் தொடரூந்து சாரதிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை பத்துமணியளவில் கைவிடப்பட்டது.

தொடரூந்து முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

எரிபொருள் தொடரூந்து சாரதிகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற சந்திப்பில் எரிபொருள் தொடரூந்து சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொடரூந்து செலுத்துனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

චීනයට නිධානයක් පහළ වෙයි.

Editor O

US to sanction Russia over Skripal attack

Mohamed Dilsad

Sri Lanka, Gujarat to enhance bilateral trade

Mohamed Dilsad

Leave a Comment