(UDHAYAM, COLOMBO) – வவுனியா – புளியங்குளம் பொலிஸாரால் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 31 கிலோவும் 600 கிராமும் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.