(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹொரனை மொரகாஹஹேன நகரில் இருந்து இந்த வேன் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மொரகாஹஹேன காவற்துறை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வேன் கொலை சம்பவத்திற்கு பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளதா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மொரகாஹஹேன காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.