Trending News

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…

(UTV|COLOMBO)-சபாநாயகர், ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் பிவித்துரு ஹெல உருமய, கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்றைய தினம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறாததால் குறித்த ஹன்சாட் அறிக்கையை ஏற்க முடியாது என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அதில், நாடாளுமன்ற நடவடிக்கைகள், அரசியலமைப்பு, நிலையியல் கட்டளை மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

No privatisation of Postal Service – Bandula

Mohamed Dilsad

இன்றைய காலநிலை

Mohamed Dilsad

P. S. M. Charles reinstated as Customs Director General

Mohamed Dilsad

Leave a Comment