Trending News

மாத்தறை சம்பவம் -மூன்றாவது சந்தேக நபர் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-மாத்தறை எலவெல்ல வீதி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவத்தில் பலியான பாடசாலை மாணவனின் இறுதி கிரியைகள் நேற்று மாலை மாத்தறை – நாயிம்பல பகுதியில் இடம்பெற்றது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் கூடியிருந்ததாக அங்குள்ள எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் பிரதான சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

UPFA to boycott Parliament until it accept Standing Orders

Mohamed Dilsad

UNP’s 72nd Anniversary Today

Mohamed Dilsad

Prez. & PM should take steps to conduct an independent probe into attacks : Cardinal

Mohamed Dilsad

Leave a Comment