Trending News

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனுவினை தம்பர அமில தேரர் இன்று(28) தாக்கல் செய்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது எனவும், இதன் காரணமாக ஜனாதிபதியின் குறித்த இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

අලියා – දුරකථන සාකච්ඡා සාර්ථකයි

Editor O

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

Mohamed Dilsad

Sri Lanka calls for collective action to address contemporary global challenges

Mohamed Dilsad

Leave a Comment