Trending News

இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை’ மாநாடு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) முற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது.

´இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை´ என்ற கருப்பொருளின் கீழ் இந்த சர்வதேச மாநாடு, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சியுடன் இணைந்ததாக நேற்றும் (28) இன்றும் (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை இராணுவத்தின் பழைமை வாய்ந்த படையணிகளுள் ஒன்றான சமிக்ஞை படையணி, இணைந்த சமிக்ஞை பிரிவுகள், தகவல் தொழிநுட்ப படை பிரிவு, திருத்தம் மற்றும் பராமரிப்புப் பிரிவு, இணைய பாதுகாப்பு படை பிரிவு, இலத்திரணியல் சமிக்ஞை பயிற்சி பாடசாலை போன்ற பல பிரிவுகளுடன் பலம் வாய்ந்ததொரு கட்டமைப்பாக செயற்படுகின்றது.

இந்த படைப்பிரிவின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் இந்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிக்கு இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான். பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினர் அல்லாத சர்வதேச தகவல் தொழிநுட்பவியலாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தகவல் தொழிநுட்ப கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவினால் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

Mahela requests not to shift historic Galle Cricket Stadium

Mohamed Dilsad

බස්නාහිර පළාතේ ගුරුවරුන්ට දැමූ තහංචිය, හකුලා ගනී.

Editor O

Australia endures hottest day on record

Mohamed Dilsad

Leave a Comment