Trending News

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-பதுளை – ஹிதகொட பிரதேசத்தில் நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 02 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை -பதுளுபிடிய விளையாட்டரங்கில் 02 கிராம் 640 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

Prince Louis wears Prince Harry’s childhood outfit

Mohamed Dilsad

பெண் அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

North Korea: Hundreds of public execution sites identified, says report

Mohamed Dilsad

Leave a Comment