(UTV|INDIA)-இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில், சராசரியாக நாள்தோறும் 80 பேர் உயிரிழப்பர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு ‘குழந்தைகள், ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ்: உலகம் 2030’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் வளர் இளம்பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள் தாய்மார்கள் ஆகியோரிடையே ஹெச்ஐவி பரவுவதைத் தடுப்பதில் தெற்காசிய நாடுகள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 19 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இது அதிகபட்சமாகும்.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவது கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 43 சதவீதம் குறைந்துள்ளது. ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்டவர்களுள் 73 சதவீதம் பேர் அதற்கான தகுந்த சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். இதுஇ கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகமாகும்.
எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், அது குறைந்துவரும் வீதம் மிக மெதுவாக நிகழ்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மெலம் தெரிவிக்கப்பட்டள்ளது.
.