Trending News

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UTV|COLOMBO)-பரீட்சை மண்டபத்தில் ஏதாவது முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறு விசேட தொலைபேசி இலக்கங்களை பரீட்சைகள் திணைக்களம் இன்று(02) அறிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் 0112 784208 அல்லது 0112 784537, 0113188350 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சை நடைபெறும் போது பரீட்சை செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக யாராவது செயற்பட்டால் பரீட்சைகள் திணைக்களத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்கள் கூறியுள்ளது.

நாளை(03) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Messi set to return for Argentina against Spain

Mohamed Dilsad

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேவி சம்பத் கைது

Mohamed Dilsad

Leave a Comment