Trending News

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை இன்று(03) ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இம்முறை, நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில், சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்ச்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

அவர்களுள் 4 லட்சத்து 22 ஆயிரத்து; 750 பேர் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகளாவர்.

இம்முறை இடம்பெறவுள்ள பரீட்சையில் மூன்று மணித்தியால பரீட்சை வினாத்தாளுக்காக, மேலதிகமாக 10 நிமிடம் வாசிப்பு நேரமாக வழங்கப்பட உள்ளதென பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்தார்.

இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால், அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் 011 278 4208 அல்லது 011 278 4537 முதலான தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் இடம்பெறும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

18 Ministers sworn in at Cabinet reshuffle

Mohamed Dilsad

சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்மித்

Mohamed Dilsad

Policeman killed, four injured in shootout

Mohamed Dilsad

Leave a Comment