Trending News

ரயில் எஞ்சின், சொகுசு பெட்டிகள் அடங்கிய தொகுதி கொள்வனவு

(UTV|COLOMBO)-புதிய ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு சொகுசு பெட்டிகள் அடங்கிய தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சின் அடங்கிய ரயில் தொகுதி முதல்தடவையாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ரயில் மார்க்கங்களில் இந்த ரயில் தொகுதி பயணிக்கக்கூடிய திறன் குறித்து ஆராயந்ததன் பின்னர் மேலும் சில ரயில் கட்டமைப்புகளைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, கரையோர ரயில் மார்க்கம் உள்ளிட்ட ரயில்சேவை அற்ற மார்க்கங்களில் இந்த புதிய ரயில்கள் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், 10 ரயில் எஞ்சின்கள் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது 902க்கும் அதிக ரயில் எஞ்சின்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 13 எஞ்சின்கள், 60 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

Mohamed Dilsad

Students protest demanding a road to their school

Mohamed Dilsad

பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment