Trending News

பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக்…

(UTV|INDIA)-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.

அதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக அனிருத் இசையில் `மரண மாஸ்’ என்ற சிங்கிள் நேற்று
வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.
பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Related posts

Navy finds 18.9 kg of Kerala cannabis

Mohamed Dilsad

Petition filed against Ranil’s MP seat

Mohamed Dilsad

மதுகமையில் வித்தியாசமான முறையில் வெற்றியை கொண்டாடிய வேட்பாளர்

Mohamed Dilsad

Leave a Comment