Trending News

ரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு

(UTV|COLOMBO)-2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்திற்கு வழங்குமாறு தகவலுக்கான ஆணைக்குழு (RTI) அறிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவ மிக்க தீர்ப்பாக ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி RTI சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தன்று TISL நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான விண்ணப்பம் தொடர்பானதாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்படும் இந்த சொத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை பெற்றுக் கொண்டவுடன் பகிரங்கமாக எவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த பிரகடனம் தனிநபர் தொடர்பான தகவலை மூன்றாந் தரப்புக்கு வழங்க முடியாது எனும் ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்ததுடன் குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

TISL குறித்த தீர்ப்பை வரவேற்பதுடன் பிரஜைகள் சொத்துக்கள் பற்றிய வெளிப்படுத்துதலை ஆயுதமாகக்கொண்டு ஊழல் மூலமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. RTI ஆணைக்குழுவானது “RTI சட்டமானது பொதுமக்களின் சொத்துக்களை தம்பக்கம் குவிப்பதற்கு எதிராகப் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த சமநிலையை பிரஜைகளுக்கு சாத்தியமாக்ககிறது” என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

TISL நிறுவனத்தால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கேட்ட பொழுது, சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பதவியை குறிப்பிட்டிருக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நாட்டின் தலைவர் தாமாகவே தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுவது நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.

“RTI சட்டத்தில் பகிரங்க பொறுப்புக் கூறல் கலாச்சாரம் மற்றும் நல்லாட்சி என்பவை பேணப்படுவதற்கு சட்டத்திலுள்ள இடைவெளி நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

RTI ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, குறித்த மேன்முறையீடானது ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படை தன்மை பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விபரங்களைப் அணுகுவதற்கான பொதுமக்களின் உரிமை போன்றவற்றை பாதிப்பதாக அமையும் என்பதை TISL சுட்டிக்காட்ட விரும்பகிறது.

தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர “சொத்துக்களை வெளிப்படுத்தல் தொடர்பாக RTI பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி எனவும் ஜனாதிபதிச் செயலகம் RTI ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்” எனவும் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

Related posts

Eighteen remanded over counterfeit USD notes

Mohamed Dilsad

Trump claims “White House mood is fantastic”

Mohamed Dilsad

“Government will increase research funds in the future” – President

Mohamed Dilsad

Leave a Comment