Trending News

இன்றைய வானிலை….

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.

கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தற்போதும் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி, மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

 

Related posts

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்

Mohamed Dilsad

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment