Trending News

மாத்தறையில் நடந்த சம்பவம்!!!

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தர கணிதப்பாட வினாத்தாளின் முதல் பாகத்தின் பரீட்சைக்காக, பரீட்சாத்திக்கு பதிலாக முன்னிலையான அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – புஹுவெல்லயில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

25 வயதான குறித்த நபர் தொடர்பில் ஐயம் கொண்ட பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரி, காவற்துறைக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இவ்வாறான பரீட்சை முறைக்கேடுகள் பதிவாகி இருந்தன.

கடந்த 3ம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள், நாளைய தினத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

Mohamed Dilsad

புகையிரதத்துடன் மோதி இத்தாலி பிரஜை உயிரிழப்பு

Mohamed Dilsad

Probes into dumping clinical waste at a Mahaweli reserve

Mohamed Dilsad

Leave a Comment