Trending News

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

என​வே குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தும் குறித்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

குழந்தைகளுக்கு பயத்தையும், ஆசையைும் ஏற்படுத்தும் படம் `சங்கு சக்கரம்’

Mohamed Dilsad

ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

Mohamed Dilsad

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment