Trending News

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராயும் குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (12) முதற்தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில், சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால், பாராளுமன்றத்தின் சொத்துக்கள் பல சேதமடைந்ததுடன் சுமார் 260,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று (12) காலை வேளையில் இந்த விடயம் குறித்து கூடி ஆராயப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

US relaxes travel advisory for Sri Lanka

Mohamed Dilsad

Wheel on Algerian plane separates during take-off, crew unaware

Mohamed Dilsad

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

Mohamed Dilsad

Leave a Comment