Trending News

சீன நிறுவன நிதித்துறை அதிகாரி பிணையில் விடுதலை

(UTV|CHINA)-சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் திகதி  கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கைதான உடன் உடல்நலக்குறவை காரணம் காட்டி மெங் வான்ஜவ் மருத்துவமனையில் சேர்ந்தார்.

அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தது.

சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங் வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்தது. மெங் வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட தெரிவித்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் வான்கோவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்துவந்த நிலையில், மெங் வான்ஜவ்-ஐ விடுதலை செய்து வான்கோவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி கனடா டாலர்கள் பிணைத்தொகை மற்றும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். வான்கோவர் நகரில் உள்ள அவரது ஒரு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

செல்லும் இடங்களை அடையாளம் காட்டும் ‘ஜி.பி.எஸ்.’ பட்டையை கையில் அணிந்திருக்க வேண்டும். என்ற நிபந்தனைகளுடன் அவரை ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

Indika Dissanayake wins Silver at Commonwealth Games

Mohamed Dilsad

Two persons arrested by PNB with heroin at Pagoda Road

Mohamed Dilsad

Leave a Comment