Trending News

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!

(UTV|INDIA)-நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘ஐரா’, ‘கொலையுதிர்க்காலம்‘ படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். கொலையுதிர் காலம் ஜனவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல ஐரா படத்தை பெப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

இந்த படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்“ திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என தெரிகிறது.

இயக்குனர் சர்ஜுன் மிக தாமதமாகவே இப்படத்தை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க இயக்குனர் தாமதம் செய்து வருவதால் நயன்தாரா கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பிரச்சினைகளை தீர்த்து ஐரா படத்தின் கிளமாக்ஸ் காட்சியை விரைவில் எடுக்க தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

 

 

 

Related posts

Gazette notifications on Hambantota Port approved by Parliament

Mohamed Dilsad

Belarus Medical University to open branch in Sri Lanka

Mohamed Dilsad

Security to be tightened at Colombo Port

Mohamed Dilsad

Leave a Comment