Trending News

பலப்படுத்தப்பட்ட லேக் ஹவுஸ் பாதுகாப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம்  கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அரசாங்க ஊடகமான லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக லேக் ஹவுஸ் நிறுவனத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,

கோட்டே மாநகர சபபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினர் நேற்று மாலை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக அமைதியற்ற வகையில் செயற்பட்டனர்.

இதனையடுத்து, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சேவையாளர்கள் மற்றும் அந்த தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர் குறித்த இடத்திற்கு பிரவேசித்த காவற்துறை விஷேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பிரிவினர் உள்ளிட்ட காவற்துறை குழுக்களினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

Mohamed Dilsad

මාතර වෙරළ තීරයේ දිය නෑමට ගිය ළමුන් දෙදෙනෙක් මරුට

Mohamed Dilsad

Australia to confront past as ball-tampering bans expire

Mohamed Dilsad

Leave a Comment