Trending News

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மகிந்த தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக்கு எதிராக உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தற்சமயம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிஹாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனை செய்யப்படுகிறது.

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை பிறப்பித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 பாராளுமன்ற  உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு எதிராக மகிந்த தரப்பில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த மேன்முறையீட்டு மனுவை முழுமையான நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி உயர்நீதிமன்றில் நேற்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில், நீதியரசர் ஈவா வனசுந்தர தவிர்ந்த முழுமையான நீதியரசர்கள் ஆயத்தினை இந்த விசாரணைகளுக்காக நியமிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தரப்பை அங்கத்துவப்படுத்தும் பிரதிநிதிகள் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவை ஆராய்வதற்காக முழுமையான நீதியரசர்கள் ஆயம் அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ඉරාන ජනපතිට, ඉන්දියානු අගමැති මෝදිගෙන් දුරකථන ඇමතුමක්

Editor O

Sajith to step down as Deputy Leader of UNP

Mohamed Dilsad

Maldives opposition leader Solih declares victory in presidential poll

Mohamed Dilsad

Leave a Comment