Trending News

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

(UTV|COLOMBO)-தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 540 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் வட மாகாணத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். நாடு முழுவதும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

President to address UNEA-4 in Kenya today

Mohamed Dilsad

மலையக மக்களை தரக் குறைவாக பேசியதாக அதாவுல்லாவிற்கு எதிராக பலத்த கண்டனங்கள் [VIDEO]

Mohamed Dilsad

பிரதான வீதிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment