(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பண்டிகை;காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ் இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையிலும்இ தமது பணிகளில் ஈடபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை;காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து ஏற்பாடுகள் கொழும்பு மாவட்;டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி பொலிஸ் மா அதிபர் அறிவுரை வழங்கியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.