Trending News

மோதல் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை…

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக் குழுவினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக் குழுவின் இருவரினால் சி.சி.ரி.வி காணொளிகள் தனித்தனியாக பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜ ஆகியவர்களினால் குறித்த காணொளிகள் பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை தனியார் ஊடகங்களின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகங்களில் இருந்து பெறப்படும் காணொளிகள் பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மற்றும் விஷேட பொலிஸ் குழுவினால் பரிசீலிக்கப்பட தீர்மானித்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

P.S.M. Charles appointed Governor of Northern Province

Mohamed Dilsad

Sri Lanka reports increase in leptospirosis cases

Mohamed Dilsad

රංජන් රාමනායක පරාජයට හේතු කියයි.

Editor O

Leave a Comment