(UTV|COLOMBO)-கடந்த வார இறுதியில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அரசியல் மாற்றங்களை இலங்கையின் ஜனநாயக, அரசியல் யாப்பு ரீதியான விழுமியங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்து – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை, அமெரிக்காவின் பெறுமதிமிக்க பங்காளியாகத் திகழ்கிறது. இலங்கை அரசுடனும், மக்களுடனுமான உறவுகளைத் தொடர்ந்து விருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)