Trending News

2019 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-வடக்கு. கிழக்கில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 2019 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச-தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வட, கிழக்கு பிரதேசங்களில்  செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின்  காணி விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை என்பன குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், வட, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த துறைகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம், தனியார் காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, வடக்கு, கிழக்கில் 263 ஏக்கர் காணியை எந்த விதமான நிதி கோரலுமின்றி இம்மாத இறுதிக்குள் விடுவிக்க பாதுகாப்பு தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இவற்றுள் 130 ஏக்கர் அரச காணிகளும், 132 ஏக்கர் தனியார் காணியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

Mohamed Dilsad

අමාත්‍යවරු භාවිතා කළ නිල නිවාසවලට කරන්න යන දේ

Editor O

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

Mohamed Dilsad

Leave a Comment