(UTV|COLOMBO)-ஆளுங் கட்சியுடன் இணைந்துக் கொண்ட, ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று, கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
2 மணித்தியாளங்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடு முழுவதுதிலும் உள்ள கட்சியின் அமைப்பாளர்கள், தொழில் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால புனரமைப்பு பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.