Trending News

UPDATE-புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று காலை வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 29 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் 

ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர்
 

ஜோன் அமரதுங்க – சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர் 

காமினி ஜெயவிக்ரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர்

மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
 
லக்ஷ்மன் கிரியெல்ல – பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் 

ரவுப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் 

திலக் மாரப்பன – வௌிநாட்டு அலுவல்கள் 

ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

ரவி கருணாநாயக்க – மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் 

வஜிர அபேவர்தன – உள்விவகாரம் மற்றும் உள் நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்
 
பாட்டளி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் 

பி. ஹெரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்

கபீர் ஹாசிம் – பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் 

ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சர்

கயந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி

சந்திரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் வறட்சி கால அபிவிருத்தி அமைச்சர்

தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

அகிலவிராஜ் காரியவசம் – கல்வியமைச்சர்

அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர்

சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர்

தயா கமகே – தொழில், தொழிற் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சர்


புதிய அமைச்சரவை சத்தியபிரமாண நிகழ்வு ஆரம்பம்.

 பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

 

 

 

Related posts

Malik Samarawickrama wants people involved with PTL revealed

Mohamed Dilsad

Closing date for university applications extended

Mohamed Dilsad

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment