Trending News

UPDATE-பாராளுமன்றம் கூடியது – இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை  பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால்  சமர்ப்பிக்கப்பட்டது


அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற புதிய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

நேற்று முற்பகல் அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டம் சுமார் 20 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றது.

இதில் இடைக்கால நிதி ஒதுக்கீடு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அரசாங்கப் பணியாளர்களது வேதனம், ஓய்வூதியங்கள், சமுர்திகொடுப்பனவுகள், மாணவர்களுக்கான சீருடை வழங்கல் என்பவற்றை தடையின்றி முன்னெடுக்க முடியும்.அதேநேரம் அடுத்தவருடம் ஜனவரி மாதம் 2019ம் ஆண்டுக்கான பாதீடு பாரளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இதன்போது பாரிய அளவிலான நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளாரஅதேநேரம், இன்றையதினம் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மீளாய்வு செய்யப்படும் என்றும், விலைக் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Investigations into Luc Besson dropped

Mohamed Dilsad

Two cops assaulted in Kalpitiya

Mohamed Dilsad

Instagram’s Co-Founders Said to Step Down From Company

Mohamed Dilsad

Leave a Comment