(UTV|COLOMBO)-நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.