Trending News

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு முடிவு – ஐ.நா பொதுச் செயலர் வரவேற்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குடேரஸ் நேற்று வரவேற்றுள்ளார்.

நியூயோர்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளதாகவும், ஜனநாயகத்தை மதிப்பது, மக்களின் நலன்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளும், அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை நியமனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Rupee firms as banks, exporters sell dollars

Mohamed Dilsad

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

Mohamed Dilsad

வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு: பாட்ஷாவின் சாதனை

Mohamed Dilsad

Leave a Comment