Trending News

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது

(UTV|COLOMBO)-கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் பொரள்ளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 04 கிராமும் 690 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏற்கனவே ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியம் – ஜனாதிபதி

Mohamed Dilsad

கொள்கலன் வாகனமொன்று கவிழ்ந்தமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

Mohamed Dilsad

இலங்கையிடம் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்

Mohamed Dilsad

Leave a Comment