Trending News

இன்று(26) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் பயணக் கட்டணங்கள்

(UTV|COLOMBO)-எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய, அரச மற்றும் தனியார் பஸ் பயணக் கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பஸ் பயணக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட உள்ளன.

நூற்றுக்கு 4.2 சதவீதத்தினால் இந்தக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

எனினும், ஆகக் குறைந்த பஸ் பயணக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, 12 ரூபா என்ற ஆகக் குறைந்த கட்டணம் அவ்வாறே அறவிடப்படுவதுடன், 15 ரூபா முதல் 43 வரையிலான கட்டணங்களில் ஒரு ரூபாவினால் குறைக்கப்படவுள்ளன.

இதேநேரம், 206 ரூபா பஸ் பயணக் கட்டணம், 197 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேநேரம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பஸ் பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளன.

இதற்கமைய, மஹரகம முதல் காலி வரையிலான கட்டணம் 440 ரூபாவாகவும், மஹரகம முதல் மாத்தறை வரையிலான கட்டணம் 550 ரூபாவாகவும் குறைக்கப்பட உள்ளன.

 

 

 

 

 

Related posts

European golf champion Celia Barquín Arozamena murdered in Iowa

Mohamed Dilsad

AG seeks fuller bench to hear petition against IGP and fmr. Defence Secretary

Mohamed Dilsad

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

Mohamed Dilsad

Leave a Comment