Trending News

விமானமொன்றில் திடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமாமொன்றினுள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பின்னர், விமான நிலைய தீயணைப்பு அதிகாரிகளால் குறித்த தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானம் நேற்று தாய்லாந்தில் இருந்து மத்தல விமான நிலையம் வந்துள்ள நிலையில் , இன்று காலை விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டதன் பின்னர் ஓமான் நோக்கி பயணிக்கவிருந்தது.

தீப்பரவல் ஏற்பட்ட இந்த விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டனொவோ -12 ரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் தீ விபத்து ஏற்படும் போது விமானிகள் இருவர் உட்பட விமானத்தில் 9 பேர் இருந்துள்ள நிலையில் , தீயினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

Authorities warn of high levels of air pollution

Mohamed Dilsad

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

Mohamed Dilsad

ජනාධිපතිවරණය වළක්වන්නැයි පෙත්සම ගොනු කළ නීතිඥයා, අධිකරණය නියෝග කළ ගාස්තුව ගෙවයි.

Editor O

Leave a Comment