Trending News

104 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று (26) ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தமது 1 ஆவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களாக 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக டெரன்ட பொள்ட் 6 விக்கெட்டுக்களையும் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் அடிப்படையில் 110 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி தனது 2 ஆவது இன்னிங்சை தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

 

 

 

 

Related posts

Two Foreign Made Hand Grenades Found In Lorry 

Mohamed Dilsad

Woman with 3 children held on clandestine arrival from Sri Lanka

Mohamed Dilsad

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment