Trending News

ஜப்பானில் திமிங்கல வேட்டை-ஜூலை மாதம் ஆரம்பம்

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கடலோரப் பகுதி மக்கள் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடி வந்தனர். திமிங்கல இறைச்சியை அவர்கள் விருப்பமுடன் சமைத்து சாப்பிட்டனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் திமிங்கல இறைச்சி மீதான விருப்பம் அதிகரித்தது. ஆனால் சமீப காலமாக திமிங்கல இறைச்சியை சாப்பிடுவது அங்கு குறைந்தது.

பல்லாண்டு காலமாக ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டிருந்தபோதுகூட ஆராய்ச்சிக்காகத்தான், அவை வேட்டையாடப்படுவதாக கூறியது. ஆனால் திமிங்கல இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது. இது சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.

இதற்காக ஐ.டபிள்யு.சி. என்று அழைக்கப்படுகிற சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…

Mohamed Dilsad

“Will restore laws to stop garbage dumping” – Minister Mangala

Mohamed Dilsad

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி-பொது மக்களால் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment