Trending News

‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் காதலரை மணந்தார்

(UTV|AMERICA)-புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.

இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.

இருவரும் மறுபடியும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.

கலிபோர்னியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இல்லை.

இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

Mohamed Dilsad

අමාත්‍ය මණ්ඩලයට, තවත් ඇමතිවරයෙක් පත් කිරීමේ සූදානමක්…?

Editor O

Couple hit by train while taking selfie in Kahawa

Mohamed Dilsad

Leave a Comment