Trending News

விஷாலை அடுத்து திருமணம் குறித்து வரலட்சுமியின் அறிவிப்பு

(UTV|INDIA)-நடிகர் விஷால் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக  தகவல் வந்த நிலையில் நடிகை வரலட்சுமியும் தனது திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அவ்வப்போது எனது திருமணம் குறித்து வதந்திகள் கிளம்புவது போலவே தற்போது வருட இறுதியில் மீண்டும் எனது திருமணம் குறித்த வதந்தி கிளம்பியுள்ளது. நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்க போவதாகவும், பரவி வரும் அந்த தகவல் மீண்டும் வதந்தி என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போதைக்கு நான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. நான் என் வேலையில் கவனம் தற்போது செலுத்தி கொண்டிருக்கின்றேன் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

Alexander Krushelnitsky subject of anti-doping case

Mohamed Dilsad

Bug found in consignment; Russia restricts SL tea imports

Mohamed Dilsad

Transparency International commends Bribery Commission for tackling corruption

Mohamed Dilsad

Leave a Comment