Trending News

மாவனல்லை சம்பவம்-07 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

07 சந்தேகநபர்களும் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாவனல்லை, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த அண்ணன் தம்பி ஆகிய இருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மாவனல்லைச் சம்பவம் மாத்திரமல்லாது, கம்பொள, பொல்கஹவெல உள்ளிட்ட பிரதேசங்களிலும் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Related posts

Rex Tillerson sworn in as Secretary of State

Mohamed Dilsad

ඩොනල්ඩ් ට්‍රම්ප්ගෙන් ඡන්ද පොරොන්දුවක්

Editor O

නිල ඡන්ද දැන්වීම් පත්‍රිකා ගෙදරට ගෙනැත් දෙන දිනයන් ප්‍රකාශයට පත් කරයි.

Editor O

Leave a Comment