Trending News

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இந்த வருடத்தின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாளையதினம் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ජනාධිපතිවරයෙක් සහිත ශක්තිමත් ආණ්ඩුවක් ගොඩනැගීමට තිබූ අවස්ථාව අහිමි වුණා – මනූෂ නානායක්කාර

Editor O

கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

Mohamed Dilsad

පළාත්පාලන ඡන්ද වීමසීම පෙබරවාරි 10 වනදා

Mohamed Dilsad

Leave a Comment