Trending News

முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள்- 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

(UTV|NEW ZEALAND)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் பெரேரா தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து 102 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் நீஷாம் 3 விக்கெட்டுக்களையும் போல்ட், சோதி, பர்கியூஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 45 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

 

 

 

 

Related posts

ශ්‍රී ලංකාව සහ නවසීලන්තය අතර, 20-20 ක්‍රිකට් තරඟය අද රෑ 07 ට දඹුල්ලේදී

Editor O

Emotional farewell for departing Army Commander

Mohamed Dilsad

MP Thondaman calls for review of collective agreement

Mohamed Dilsad

Leave a Comment