Trending News

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை…

(UTV|COLOMBO)-கொழும்பு மற்றும் அதனைஅண்டியுள்ளபகுதிகளில் நிலவும் கடும் வாகனநெருக் கடியைகட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகுரயில்கட்டமைப்பொன்றைஅமைப்பதற்காக ஜப்பான் சர்வ தேசபுரிந்தணர்வு நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.

இந்த இலகு ரயில் இடம்பெயர்வு கட்டமைப்பின் மூலம் நிர்வாக கேந்திர நிலையம் வணிக மத்திய நிலையம் மற்றும் கொழும்பை அண்டியுள்ள அதிக மக்கள் தொகையுடன் கூடியதங்குமிடபிரதேசங்களை ஒன்றுடன் ஒன்றுதொடர்புபடுத்தும் வகையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்த இலகு ரயில் இடம்பெயர்வு கட்டமைப்பு நெடுஞ்சாலைவலைப்பின்னலுடனும் மாதிரி போக்குவரத்து நிலையத்துக்கும் இலகுவானமுறையில் பிரவேசிக்கக் கூடிய  வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கொழும்புகோட்டை மாதிரி போக்குவரத்து மத்தியநிலையத்தில் இருந்து மாலபே டிப்போ வரையில் 16 ரயில் நிலையங்களுடன் 17கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இலகுரயில் பாதைகட்டமைப்பொன்று 246 641 மில்லியன் ஜப்பானியயென் முதலீட்டுடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கீடுசெய்யும் நோக்கில் 200 415 மில்லியன் ஜப்பான்யென்களை வழங்குவதற்கு ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனம் உடன்பட்டுள்ளது. இதற்கான கடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் கடன் உடன்படிக்கையை எட்டுவதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்குஅமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது.

 

 

 

Related posts

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…

Mohamed Dilsad

Ministerial subjects for several key Ministries changed

Mohamed Dilsad

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்

Mohamed Dilsad

Leave a Comment