Trending News

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகரின் தீர்மானம்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற  எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ளவேண்டி நேரிடுவதாக இன்று முற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவை ஏற்கவேண்டி நேரிடுவதாகவும் சபாநாயகர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற  குழுக்களை நிறுவுவது தொடர்பிலும் கட்சித் தலைவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

අපේක්ෂකයෙක් ප්‍රවර්ධනය කළ රාජ්‍ය සේවකයන් නවයක් මැතිවරණ රාජකාරීවලින් නෙරපයි.

Editor O

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

Mohamed Dilsad

Leave a Comment