Trending News

“சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இந்த வருடம் முதல் “சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 1,000 ரூபா முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முற்றாக ஊனமுற்ற நிலையை எதிர்நோக்க ​நேரிட்டால் அதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு 1 இலட்சம் ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பெற்றோர்களை இழக்கும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் கொடுப்பனவு 75,000 ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பெண் மருத்துவர் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

பாவனைக்கு பொருத்தமற்ற 2500 பெரிய வெங்காயம் அழிப்பு

Mohamed Dilsad

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment