Trending News

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இன்று(09) காலை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கூட்டுறவு ஆணையாளர் நசீர், அகில இலங்கை விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தி தேசிய அமைப்பாளரும் வட மேல் மாகாண ஜே.வி.பி உறுப்பினர் நாமல் கருனாரத்ன, நுகர்வோர் கூட்டுறவு சம்மேளனத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றியாஸ் உட்பட கூட்டுறவு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை
அமைச்சரிடம் பிரஸ்தாபித்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை
ஏற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஊடகப்பிரிவு

 

 

 

 

 

Related posts

සමාගම් 21ක් ගැන මහ බැංකුවෙන් නිවේදනයක්

Editor O

அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு தங்கப் பதக்கங்கள்

Mohamed Dilsad

GCE O/L – Health to be made a compulsory subject

Mohamed Dilsad

Leave a Comment