Trending News

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆகாய டாக்ஸிகள் அறிமுகம்?

வீதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆகாய டாக்ஸிகள் கனவை நனவாக்கும் Bell Helicopter வரும் 2025 இற்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இது தற்போது நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்த ஆண்டியின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில், Bell Nexus என்ற ஆகாய டாக்ஸிக்கான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது Bell Helicopter.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las Vegas) நகரில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியின் அதிகாரபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக ஆகாய டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது நிறுவனம்.

ஆகாய டாக்ஸியின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றை குறித்த நிறுவனம் கையாளவுள்ளது. அத்துடன், வேறு ஐந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆகாய டாக்ஸியை அறிமுகம் செய்யவும் குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

IMF warns Trump tariff would hurt US

Mohamed Dilsad

TNA not happy over Shavendra’s appointment

Mohamed Dilsad

Leave a Comment