(UTV|COLOMBO)-எதிர்ப்பார்க்கப்படுகின்ற பொருளாதார சந்தையை உருவாக்க இன்னும் 10 வருடங்கள் தேவைப்படும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாடுகளில் இருந்து எந்தவித உதவியும் நாட்டிற்கு கிடைக்க பெறவில்லை
சர்வதேச நாடுகள் இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துள்ளன.
இந்தநிலையில் இலங்கை மீது சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொள்ளும் வகையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளோம்.
எதிர்பார்த்துள்ள பொருளாதார இலக்கை அடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.